A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Friday, March 03, 2006

வேலையில்லாம யோசிச்சா

நம்ம நாட்டில ஒரு பத்து இலட்சம் கார்கள் இருக்குதுன்னு வைத்துக்கொள்வோம். அதுல ஒரு இலட்சம் பேர் கார்ல வேலைக்கு போறாங்கன்னும் வைத்துக்கொள்வோம். சாதாரணமா ஒரு கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் வரை போகும். நகரத்துக்குள்ள இன்னும் குறைவாத்தான் போகும். பொழுது போகாம இதைப்பத்தி யோசித்ததில எப்படியெல்லாம் தோனிச்சுன்னு சொல்றேன். இப்போ அந்த ஒரு இலட்சம் பேரும் ஒரு நாள் நடந்தோ அல்லது பஸ்ஸிலோ வேலைக்க்குப் போறாங்கன்னு எடுத்துக்கிட்டா, சுமார் ஒரு இலட்சம் லிட்டர் பெட்ரோல் மிச்சம்.

பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபான்னு சொன்னா 50 இலட்சம் ரூபா நாட்டுக்கு மிச்சம். இந்த பெட்ரோலை ரீபைனரியில் இருந்து கொண்டு வர ஆகிற டீசல் செலவு மிச்சம். டேங்கர் லாரிக்கு டீசல் மிச்சம். ரோட்டில் டிராபிக் குறைவதால் வண்டிகள் எல்லாம் வேகமா நகரும். அதனால் மைலேஜ் அதிகம் கொடுக்கும். அதனாலும் பஸ், மற்ற லாரிகளுக்கு ஆகும் டீசல் செலவு குறையும். ரீபைனரியில் குரூடு ஆயிலை சுத்திகரிக்க ஆகும். மின்சாரம் மிச்சம்.

மின்சாரம் குறைவாகத் தேவைப்படுவதால் அதற்குத் தேவையான நிலக்கரி மிச்சம். நிலக்கரியை எங்கிருந்தாவது கொண்டு வரவேண்டும். வெளிநாட்டில் இருந்து எனில் கப்பலில் கொண்டு வரவேண்டும். அந்த கப்பலுக்கு ஆகும் நிலக்கரி மிச்சம். உள்நாடு என்றால் இரயிலில் தான் கொண்டு வருவார்கள். எனவே இரயிலுக்கு ஆகும் டீசலோ மின்சாரமோ மிச்சம். சரக்கு இரயில்களின் கூட்டம் குறையும். அதனால் பாஸஞ்சர் இரயில்கள் வேகமாகப் போகும். மக்களுக்கு நேரம் மிச்சம்.

இத்தனை எரிபொருட்கள் குறைவதனால் காற்றில் நச்சுப்புகை குறையும். மக்களுக்கு சுவாச நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். அவர்களுக்கு மருத்துவ செலவு குறையும். அந்த மாதிரி நோய்வாய்ப்பட்டா ஏதாவது கார் மாதிரி வாகனத்தில் தான் போகனும் அதற்கு பெட்ரோல் செலவு. கூட ரெண்டு பேர் ஆஸ்பத்திரியில் இருக்கணும். அவங்களுக்கு போக்குவரத்து செலவு. நேரம் விரயம்.

ரோட்டில் விபத்துக்கள் குறையும். அதனால் மக்களுக்கு மருத்துவ செலவு மிச்சம். வண்டிகளுக்கும் ரிப்பேர் செலவு மிச்சம். வண்டி டயர் குறைவாகத் தேயும். டயர் தயாரிக்கிறதுக்கு ஆகிற மின்சாரச் செலவு மிச்சம். அந்த டயரை கடைகளுக்கு கொண்டுவர வேண்டுமல்லவா. அதற்கான லாரி செலவு மிச்சம்.

No comments:

Followers