A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Monday, March 13, 2006

சொற்பிறப்பியல் - Etimology

'''சான்டா பே இண்ஸ்டியூட்''' என்ற கல்விநிலையத்தின் வலைத்தளத்தில் அனைத்து மொழிகளின் சொற்களைப் பற்றியும் அவற்றின் பிறப்பைக் குறித்தும் ஆராய்ந்திருக்கிறார்கள். அவற்றில் உள்ள சில தமிழின் மூல வார்த்தைகளைப் படித்து அவற்றின் பொருளை இங்கு தர நினைத்திருக்கிறேன்.

இனி சொற்கள்..

மடம் மடம் என்ற சொல்லுக்கு அறியாமை, எளிமை, அழகு என பல பொருட்கள் உண்டு. இம்மூலத்தில் இருந்து பிறந்த சில சொற்களைக் கீழே காணலாம்.

மடமை - அறியாமை, முட்டாள் தனம் - ignorance, stupidity
மடவரல் - எளிமை, பெண் - simplicity, woman

மடவன், மடையன்
- முட்டாள் ஆண் - stupid person

மடப்பம் - எளிமை - simplicity

மடந்தை - அழகு -சிறு பெண் ( பொதுவாக பதின்ம வயதில் இருக்கும் பெண் ) - girl of teen age



மட்டி - முட்டாள் - stupid

மண்டு - முட்டாள் - stupid

2 comments:

சம்மட்டி said...

'MAD' entra sollum ithilirunthu vanthirukka vendum

சிவக்குமார் (Sivakumar) said...

நீங்கள் சொல்வது போலவும் இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல அவதானிப்பு.

தங்களுடைய கருத்துக்கு நன்றி, சம்மட்டி.

Followers