A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)

Tuesday, March 14, 2006

மகர வரிசை - M Series

மந்தாரம் - மேகத்தைப்போன்ற - Cloudiness

வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருக்கிறது என்ற தொடரின் மூலம் இதனை அறியலாம்.
சாணக்கியன் கூட தன் பதிவில் மப்பும் மந்தாரமுமாக என்றால் என்ன என்றூ கேட்டிருந்தார்.

மந்தி - பெண் குரங்கு அல்லது பொதுவாக குரங்கு. - Female Monkey or Genrally Monkey

மந்தை - விலங்கு அல்லது பறவைக்கூட்டம், கிராமத்தின் மையத்திலுள்ள திறந்த வெளி - Flock, Herd, or Open space in the village

சென்னையில் மந்தைவெளி என்ற ஊர் இருக்கிறதல்லவா?

மனை - வசிப்பிடம் - House, Dwelling Place

மனைவி, மனையாள் - இல்லாள் - Wife

மன்று - அரங்கம், கூடுமிடம் - Hamlet, Hall, Place of assembly

மன்றம் - Hall, Assembly, Court

மன்றல் - திருமணம் - Marriage

மாந்தர் - மக்கள் , ஆண் மக்கள் - People, Male persons

மாண் - உயர்ந்த, சிறந்த - Excellent, Glorious

மாண்பு - உயர்வு - Glory

மாட்சி, மாட்சிமை - உயர்வு - Glory

மன்னி - கழுத்து - Neck

மென்னியத் திருகிடுவேன் என்பது இப்போதும் வழக்கிலிருக்கும் சொல்.

மாள் - இறத்தல், அழிதல் To Die, Destroy

மாண்டார் - இறந்தவர் - The Dead

மட்கு - சிதைதல் - Be destroyed

No comments:

Followers