பெறுதி - gain, profit
பெற்றவன் - father
பெறு - acquisition, childbirth
பிறப்பு - birth, origin
பிறை - crescent moon
பெற்றி - acquisition
பிறவி - birth
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
Tuesday, March 28, 2006
Monday, March 27, 2006
அல - To suffer
அலம் - distress, pain, misery
அலந்தலை - distress, vexation, confusion
அலந்தோன் - one who is in distress
அலசு - to suffer, be distressed
அலம்பல் - vexation, trouble
அலு - to be weary, tired by overwork or care
அலுப்பு - weariness, exhaustion
அலுவல் - business, affair
>> அலுவல் + அகம் = அலுவலகம்
>> அலுவல் + அர் = அலுவலர்
அலை - wander in weariness
அலைச்சல் - weariness, vexation
அலைச்சாட்டுதல் - to make vex
அல்லல் - affliction, distress
அல்லாடு - to suffer

அழகு - Beauty
அழகு - Beauty
ஆய்கம் - அழகு - symmetry, Beauty (ஆய்கொல் மயிலோ)
அரி - அழகு - Beauty
அரிவை - பெண் - Women of age 20 - 25.
அணி - அழகு, ஆபரணம் - Beauty, Ornament
எழில் - beauty, gracefulness
கோலம் - Beauty, colour
சந்தம், அந்தம் - Beauty
சாய் - brilliance, light, beauty, colour, fame, reputation
( சாயம் - Colour )
தையல் - Woman, Beauty
சொம்பு- Beauty
முருகு - இளமை, அழகு - Youth, Beauty

Thursday, March 23, 2006
அம்மா என்றழைக்க
பெற்றவளை அழைக்கத் தான் எத்தனை பெயர் கொடுத்தாய் தமிழே?
அன்னை - annai
அம்மா - ammaa
ஆய் - aay
தாய் - thaay
ஆத்தாள் - aaththaaL
தள்ளி - thaLLi
( தள்ளி என்பதை தெலுங்கில் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். )
அவ்வை - avvai

பர - To Spread
பரப்பு - area, spread
பரவை - Sea ( Because of its large area )
பரந்த - expanded
பரதர் - A group of People living near the Sea
பரம்பு - To spread
பார் - உலகம் - World
பாரார் - உலகத்தார் - People of the World
பரப்புரை - பலர் அறியக் கூறுவது - Campaign
பரட்டை - To spread
பரவல் - distribution
பரம் - earth
பரதேசி - One who travels to many places/countries

Wednesday, March 22, 2006
ஊர் பல விதம்
ஊர் - village, town, city
பட்டிணம் - seaside village, town, village
பாக்கம் - Maritime town
நகரம் - house, abode, mansion, temple, palace, town, city
எயில் - fortress, wall, fortification, city, town
குடி - house, abode, home, family, lineage, town, tenants
சேரி - town, village, hamlet; street, quarters of the Pariahs
பட்டி - town, city, hamlet, pastoral village
பாளையம் - Army Camp
மடப்பம் - town in an agricultural tract, chief town among 500 villages

Tuesday, March 21, 2006
வெள் - வெள்ளை/வெண்மை
வெளிச்சம் - Light
வெளு - Whiten, Make it bright, wash
வெளிறு - to become white, pale
வெள்ளையர் - White skinned people
வெள்ளி - Silver
வெள்ளன - Early in the morning
வெள்ளை - White
வெள்ளை - வெண்மை (ளகரம் -> ணகரமாதல்)
வெண்கல் - Quartz
விளக்கு - Lamp ( which gives light )
விளக்கம் - make it clear
வெண்ணெய் - வெண்மை + நெய் = butter
வெண்ணிலா - White moon
வெளு - Whiten, Make it bright, wash
வெளிறு - to become white, pale
வெள்ளையர் - White skinned people
வெள்ளி - Silver
வெள்ளன - Early in the morning
வெள்ளை - White
வெள்ளை - வெண்மை (ளகரம் -> ணகரமாதல்)
வெண்கல் - Quartz
விளக்கு - Lamp ( which gives light )
விளக்கம் - make it clear
வெண்ணெய் - வெண்மை + நெய் = butter
வெண்ணிலா - White moon
Friday, March 17, 2006
பழகியதும் பழையதும்
இன்றைய வேர்ச்சொல் பழ.
பழ என்பது old என்பதற்கு இணையான தமிழ் வார்த்தை. இனி வார்த்தைகளுக்கு வருவோம்.
பழசு - வயதானது, நாள்பட்டது - which is aged or damaged over time
பழமை - Old Saying.
பழுது - Worn out.
பழக்கம் - Habit, An activity which is repeated over time.
பழக்கம் ->பழகுதல், பழக்குதல்
பண்டு, பண்டைய - very old,
பழம் -Fruit - Riped over time
பழுத்தல் -Ripen - Maturing over time

Thursday, March 16, 2006
அறு, வெறு
அறு - break, cease, become extinct, perish
அறு - cut part
அறுதி - முடிவு, எல்லை - End
அறுப்பு, அறுவடை - Harvest
அற்றம் - அழிவு - Destruction
--------------------------------------------------------------
வெறு - empty - இல்லாமை
வெறிச்சோடிக் கிடந்தது போன்றவற்றில் இருந்து இதனை அறியலாம்.
வெறுமை - emptiness
வெறுமன் - worthlessness
வெற்றர் - poor people
வறள் - emptiness
வறுமை - இல்லாத நிலைமை - poverty
வறட்சி, வறண்ட- dry, waterless

Wednesday, March 15, 2006
ப வரிசை - P Series
புலம் - Sense, Wisdom
புல - to make known - புலப்பட்டது போன்ற சொற்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
புலத்தோர் - wise men - சான்றோர்
புலப்பம் - appearing clearly - தெளிவாகத் தோன்றுதல்
புலமை - knowledge - அறிவு
புலவன் - wise man - கற்றோன்.
-------------------------------------------------------------------
பொல் - மோசமான, மாசுபாடு - bad, Pollution
புலை - பொய் - lie
புலையன் - low caste person - கீழ் சாதி மனிதன்
பொல்லா - bad - தீய
பொல்லாப்பு, பொல்லாமை - evil, vice - தீங்கு
பொல்லான் - Wicked man - கொடியவன்

Tuesday, March 14, 2006
மகர வரிசை - M Series
மந்தாரம் - மேகத்தைப்போன்ற - Cloudiness
வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருக்கிறது என்ற தொடரின் மூலம் இதனை அறியலாம்.
சாணக்கியன் கூட தன் பதிவில் மப்பும் மந்தாரமுமாக என்றால் என்ன என்றூ கேட்டிருந்தார்.
மந்தி - பெண் குரங்கு அல்லது பொதுவாக குரங்கு. - Female Monkey or Genrally Monkey
மந்தை - விலங்கு அல்லது பறவைக்கூட்டம், கிராமத்தின் மையத்திலுள்ள திறந்த வெளி - Flock, Herd, or Open space in the village
சென்னையில் மந்தைவெளி என்ற ஊர் இருக்கிறதல்லவா?
மனை - வசிப்பிடம் - House, Dwelling Place
மனைவி, மனையாள் - இல்லாள் - Wife
மன்று - அரங்கம், கூடுமிடம் - Hamlet, Hall, Place of assembly
மன்றம் - Hall, Assembly, Court
மன்றல் - திருமணம் - Marriage
மாந்தர் - மக்கள் , ஆண் மக்கள் - People, Male persons
மாண் - உயர்ந்த, சிறந்த - Excellent, Glorious
மாண்பு - உயர்வு - Glory
மாட்சி, மாட்சிமை - உயர்வு - Glory
மன்னி - கழுத்து - Neck
மென்னியத் திருகிடுவேன் என்பது இப்போதும் வழக்கிலிருக்கும் சொல்.
மாள் - இறத்தல், அழிதல் To Die, Destroy
மாண்டார் - இறந்தவர் - The Dead
மட்கு - சிதைதல் - Be destroyed

Monday, March 13, 2006
சொற்பிறப்பியல் - Etimology
'''சான்டா பே இண்ஸ்டியூட்''' என்ற கல்விநிலையத்தின் வலைத்தளத்தில் அனைத்து மொழிகளின் சொற்களைப் பற்றியும் அவற்றின் பிறப்பைக் குறித்தும் ஆராய்ந்திருக்கிறார்கள். அவற்றில் உள்ள சில தமிழின் மூல வார்த்தைகளைப் படித்து அவற்றின் பொருளை இங்கு தர நினைத்திருக்கிறேன்.
இனி சொற்கள்..
மடம் மடம் என்ற சொல்லுக்கு அறியாமை, எளிமை, அழகு என பல பொருட்கள் உண்டு. இம்மூலத்தில் இருந்து பிறந்த சில சொற்களைக் கீழே காணலாம்.
மடமை - அறியாமை, முட்டாள் தனம் - ignorance, stupidity
மடவரல் - எளிமை, பெண் - simplicity, woman
மடவன், மடையன் - முட்டாள் ஆண் - stupid person
மடப்பம் - எளிமை - simplicity
மடந்தை - அழகு -சிறு பெண் ( பொதுவாக பதின்ம வயதில் இருக்கும் பெண் ) - girl of teen age
மட்டி - முட்டாள் - stupid
மண்டு - முட்டாள் - stupid

Thursday, March 09, 2006
கலை - Art
ஓவியம் - Drawing
நாட்டியம் - Dance
பாடல் - Poetry
சிற்பம் - Sculpture
நாடகம் - Drama
இசை - Music
தையல் - Stitching
கட்டிடக்கலை - Architecture
தச்சுக்கலை - Carpentry
நாட்டியம் - Dance
பாடல் - Poetry
சிற்பம் - Sculpture
நாடகம் - Drama
இசை - Music
தையல் - Stitching
கட்டிடக்கலை - Architecture
தச்சுக்கலை - Carpentry
Wednesday, March 08, 2006
ஆனைக்கொன்றான்
இதுவே அனகோண்டா என்ற பாம்பின் பெயருக்கு மூலமாகும். இது யானையையே கொன்று விரும் அளவுக்கு பெரிதாக இருந்ததால் இலங்கையில் இவை ஆனைக்கொன்றான் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
தகவல்: விக்கிபீடியா மற்றும் அனிமல் டைவர்சிடி

Tuesday, March 07, 2006
ஒரு மரத்தின் பயணம்
நான் ஒரு மரம். காட்டில் என் உற்றார் உறவினருடன் வாழ்ந்து வந்தேன். காட்டில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. காட்டில் மயிலாட கூடவே குயிலும் கூவ புள்ளினங்களுடனும் புல்லினங்களுடனும் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் மானிடர்கள் கையில் ஆயுதங்களுடன் வந்தனர். சுற்றியிருந்த என்னவர்கள் இதனைப்பார்த்து கிலிக் கொண்டு விசித்திர சத்தங்களை எழுப்பினர். எனக்கும் கிலிபிடித்துக் கொண்டிருந்தது. செவதறியாது நின்றேன். என் போன்ற மரங்கள் நிற்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? என் மீது அமர்ந்திருந்த பறவைகளும் பறந்து போய்விட்டன.
இருவர் வந்தனர். கையில் ஏதோ ஒரு இயந்திரம் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் ஏதோ ஒரு விசையைத் திருகியதும் அவ்வியந்திரம் பெருஞ்சத்ததுடன் சுழன்றது. திடீரென்று என்னருகில் நின்றிருந்த என் தோழனை அவ்வியந்திரம் அறுக்கத் தொடங்கியது. என் கண் முன்னே என் நண்பன் மடிகிறான். தன் நண்பன் ஒருவன் கொல்லப்ப்டும் போது அருகில் இருந்தும் ஏதும் செய்யவியலாது நின்று கொண்டிருப்பதைக் காட்டிலும் ஒரு இழிவு உண்டோ? என் நிலை அதுதான். சற்று நேரத்தில் மடங்கிச் சரிந்தான் என் தோழன். பின்னர் அவர்கள் என்னருகில் வந்தனர். என்னுடல் அச்சத்தில் நடுங்கியது. என்னையும் அவர்கள் அறுக்கத் தொடங்கினர். அம்மா! என்ன வலி? எனக்க்கும் மட்டும் வாய் இருந்திருந்தால் என் குரல் காட்டையும் தாண்டி இப்புவி முழுவதும் கேட்டிருக்க்கும். சிறிது நேரத்தில் நானும் வீழ்ந்தேன்.
என்னவர்கள் பலர் என்னுடன் வீழ்ந்தனர். ஒருவன் என்னுடைய கிளைகளை வெட்டினான். ஒருவனை பொதுவிடத்தில் கைகால்களை வெட்டி நிர்வாணப்படுத்தி நிறுத்தினால் அது எத்தனை பெரிய அவமானம்? அதுதான் எனக்கு நேர்ந்தது. பின்னர் எங்கள் அனைவரையும் ஒரு பெரிய வண்டியில் தூக்கி வீசினர். பின்னர் பெருஞ்சத்ததுடன் வண்டி நகர்ந்தது. விலங்குகள் எல்லாம் அஞ்சி மறைவிடங்களில் போய் அப்பிக்கொண்டன. பின்னர் காடு தாண்டி நாங்கள் நாடு புகுந்தோம். அப்பப்பா, என்ன இரைச்சல் சாலையில் மற்ற வாகனங்களின் எஞ்சின் சத்தமும் ஹாரன் ஒலியும் கேட்கச் சகிக்கவில்லை.
சற்று நேரத்திலேயே ஒரு பயங்கர துர்நாற்றம் அடித்தது. வண்டியின் பக்கவாட்டில் எட்டிப்பார்த்த போது தான் தெரிந்தது அது ஒரு சாக்கடை நதியென்பது. வெயில் கொளுத்துகிறது. இது நகரமா நரகமா எனத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் வண்டி ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்தது. ஏதோ காகிதத் தொழிற்சாலையாம். பேசிக்கொண்டார்கள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் எங்களைக் கொலைக்களத்திற்குக் கொண்டு சென்றனர். ஒரு இயந்திரம் எங்களை நார்நாராகக் கிழித்தது. ஏதோ குடலைப்பிடுங்கும் இராசயன வாடை அடித்தது. எது எதிலோ எங்களை அமிழ்த்தினர். பின்னர் பல கொடுமைகளுக்குப் பிறகு நான் நிறம் மாறி பலநூறு துண்டுகளாக வெளி வந்தேன். என்னை டிஷ்யூ பேப்பர் என்று அழைத்தனர். மீண்டும் லாரி. மீண்டும் இரைச்சல். மீண்டும் நாற்றம். சிறிது தூர பயணத்திற்குப் பிறகு ஒரு உணவகத்தை அடைந்தேன். இங்கு சூழ்நிலைகள் எல்லாம் தலைகீழாக இருந்தன. அறை குளுகுளுவென்றிருந்தது.
மெல்லிய இசை பாறை மீது வழிந்தோடும் நீர் போல கசிந்து கொண்டிருந்தது. நறுமணம் வீசியது. என்னை ஒரு மேசை மீது வைத்தனர். ஒரு ஆணும் பெணும் வந்தனர். கடைக்கரரிடம் ஏதோதோ கேட்டனர். பேசிச் சிரித்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் ஏதோ உணவு வந்தது. உண்ட பின் அப்பெண் என்னைக் கையிலெடுத்தாள். மெதுவாக என்னை அவள் இதழ் மீது ஒற்றியெடுத்தாள். பின்னர் வீசியெறிந்தாள். அவ்வளவு தான் கவனிப்பாரற்று தெருவில் கிடந்தேன். மனிதர்களும் வாகனங்களும் என்மீது ஏறி மிதித்துச் சென்றனர். பின்னர் மண்ணோடு மண்ணாக கலந்து எனது அடையாளத்தை இழந்தேன்.
எனக்குத் தோன்றியதெல்லாம் இதுதான். மனிதனின் ஒரு நிமிட சுகத்திற்காகவா இவ்வளவு நீண்ட பயணமும் இவ்வளவு அவஸ்தைகளும்? என்ன வாழ்க்கையடா இது? ஏன் இவர்களால் கைக்குட்டை பயன்படுத்திக்கொள்ள முடியாதா? மரமாகிய நாங்கள் தான் வேண்டுமா?

காடு - Forest
மரம் - Tree
செடி - Plant
கொடி - Creeper
ஓடை - Stream
ஆறு - River
குளம் - Pond
ஏரி - Lake
புதர் - Bush
விலங்கு - Animal
பறவை - Bird
பூச்சி - Insect
தேனீ - Honeybee
தேன் - Honey
இலை - Leave
தண்டு - Stem
சேறு - Mub
செடி - Plant
கொடி - Creeper
ஓடை - Stream
ஆறு - River
குளம் - Pond
ஏரி - Lake
புதர் - Bush
விலங்கு - Animal
பறவை - Bird
பூச்சி - Insect
தேனீ - Honeybee
தேன் - Honey
இலை - Leave
தண்டு - Stem
சேறு - Mub
Friday, March 03, 2006
வேலையில்லாம யோசிச்சா
நம்ம நாட்டில ஒரு பத்து இலட்சம் கார்கள் இருக்குதுன்னு வைத்துக்கொள்வோம். அதுல ஒரு இலட்சம் பேர் கார்ல வேலைக்கு போறாங்கன்னும் வைத்துக்கொள்வோம். சாதாரணமா ஒரு கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் வரை போகும். நகரத்துக்குள்ள இன்னும் குறைவாத்தான் போகும். பொழுது போகாம இதைப்பத்தி யோசித்ததில எப்படியெல்லாம் தோனிச்சுன்னு சொல்றேன். இப்போ அந்த ஒரு இலட்சம் பேரும் ஒரு நாள் நடந்தோ அல்லது பஸ்ஸிலோ வேலைக்க்குப் போறாங்கன்னு எடுத்துக்கிட்டா, சுமார் ஒரு இலட்சம் லிட்டர் பெட்ரோல் மிச்சம்.
பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபான்னு சொன்னா 50 இலட்சம் ரூபா நாட்டுக்கு மிச்சம். இந்த பெட்ரோலை ரீபைனரியில் இருந்து கொண்டு வர ஆகிற டீசல் செலவு மிச்சம். டேங்கர் லாரிக்கு டீசல் மிச்சம். ரோட்டில் டிராபிக் குறைவதால் வண்டிகள் எல்லாம் வேகமா நகரும். அதனால் மைலேஜ் அதிகம் கொடுக்கும். அதனாலும் பஸ், மற்ற லாரிகளுக்கு ஆகும் டீசல் செலவு குறையும். ரீபைனரியில் குரூடு ஆயிலை சுத்திகரிக்க ஆகும். மின்சாரம் மிச்சம்.
மின்சாரம் குறைவாகத் தேவைப்படுவதால் அதற்குத் தேவையான நிலக்கரி மிச்சம். நிலக்கரியை எங்கிருந்தாவது கொண்டு வரவேண்டும். வெளிநாட்டில் இருந்து எனில் கப்பலில் கொண்டு வரவேண்டும். அந்த கப்பலுக்கு ஆகும் நிலக்கரி மிச்சம். உள்நாடு என்றால் இரயிலில் தான் கொண்டு வருவார்கள். எனவே இரயிலுக்கு ஆகும் டீசலோ மின்சாரமோ மிச்சம். சரக்கு இரயில்களின் கூட்டம் குறையும். அதனால் பாஸஞ்சர் இரயில்கள் வேகமாகப் போகும். மக்களுக்கு நேரம் மிச்சம்.
இத்தனை எரிபொருட்கள் குறைவதனால் காற்றில் நச்சுப்புகை குறையும். மக்களுக்கு சுவாச நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். அவர்களுக்கு மருத்துவ செலவு குறையும். அந்த மாதிரி நோய்வாய்ப்பட்டா ஏதாவது கார் மாதிரி வாகனத்தில் தான் போகனும் அதற்கு பெட்ரோல் செலவு. கூட ரெண்டு பேர் ஆஸ்பத்திரியில் இருக்கணும். அவங்களுக்கு போக்குவரத்து செலவு. நேரம் விரயம்.
ரோட்டில் விபத்துக்கள் குறையும். அதனால் மக்களுக்கு மருத்துவ செலவு மிச்சம். வண்டிகளுக்கும் ரிப்பேர் செலவு மிச்சம். வண்டி டயர் குறைவாகத் தேயும். டயர் தயாரிக்கிறதுக்கு ஆகிற மின்சாரச் செலவு மிச்சம். அந்த டயரை கடைகளுக்கு கொண்டுவர வேண்டுமல்லவா. அதற்கான லாரி செலவு மிச்சம்.

Subscribe to:
Posts (Atom)